கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் ஜேடிஎஜுகேஷன் அண்ட் டிரெய்னிங் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொல்லப்பட்டது. கல்லூரி முதல்வர் பாலுசாமி பிரதிநிதிகளை வரவேற்று உரையை நிகழ்த்தினார்.

மேலும் கார்ப்பரேட் தொழில் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும், மாணவர்கள் தங்கள் தொழில் இலக்கை அடைவதற்காக, தங்கள் திறன்களை மேம்படுத்த இந்த வகையான புரிந்துணர்வுகளைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கோயம்புத்தூர் ஜேடி எஜுகேஷன் அண்ட் டிரெய்னிங் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சம்ஜித்தனராஜன் (MAAC – ன்அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்) பல்வேறு படிப்புகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

மேலும், மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தவும், அந்தந்த துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் இதயத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுதவிர, மாணவர்களுக்கு கூடுதல் அறிவுத்திறன் வழங்க இந்த வகையான முயற்சிகளை மேற்கொண்ட கே. பி. ஆர். நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்