கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை தொடக்க விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார். கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமை வகித்து சிறப்பித்தார். மத்திய அரசின் கயிறு வாரியத் தலைவர் குப்புராமு சிறப்புரை வழங்கினார்.

அவரது உரையில், தென்னை நார் தயாரிப்புகள், நிதி உதவிகள் பற்றிய ஆலோசனைகளை எடுத்துரைததார். மேலும் சிறுதொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விளக்கினார்.

இவ்விழாவில் மத்திய அரசின் கயிறு வாரியத் துறையின் வட்டா ரஅலுவலர் பூபாலன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து துறைசார் மாணவஅலுவலக பொறுப்பாளர்களின் நியமனமும் உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது. இவ்விழாவில் 836 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.