KPR பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் சங்கமம் கலைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள KPR பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், காவடியை தலையில் வைத்து ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல் போன்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

12 குழுக்களைச் சேர்ந்த சார்ந்த 400 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். மூன்று வயது சிறுவர் முதல் 60 வயதுள்ளவர்கள் வரை இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் தோலில் காவடியை சுமந்துகொண்டு சர்வ சாதாரணமாக ஆடியதும், ஏணியின் மீது ஏறி காவடி ஆடியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.