வெங்காய பயிர்களுக்கு புதிய ‘ஆக்சிம்’ களைக்கொல்லி: இன்செக்டிசைட்ஸ் அறிமுகம்

வேளாண் வேதியியல் நிறுவனமான இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) நிறுவனம் ஆக்சிம் என்னும் பெயரில் புதிய களைக்கொல்லியை அறிமுகம் செய்துள்ளது.

வெங்காயப் பயிரை விதைத்த அல்லது களைகளின் 2-3 இலை நிலைகள் அல்லது நடவு செய்த 15-20 நாட்களுக்குப் பிறகு ஆக்சிமை பயன்படுத்தினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கைகளால் களை பறிப்பது என்பது தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் கடினமானதாகும். அதற்கு ஆகும் செலவுகளும் அதிகம். எனவே இதற்கான சிறந்த தீர்வாக ஆக்சிம் இருக்கும்.

இது குறித்து இன்செக்டிசைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில்,

உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரபி பருவத்தில் 70 சதவீத வெங்காயம் விளைகிறது. இந்த நிலையில் களைகள் வரும்போது அவற்றை அகற்றுவதற்கான செலவுகள் அதிகமாக உள்ளன.

வயலைப் பொறுத்தவரை களைகள் பூச்சிகளுக்கு மாற்றான ஒரு விருந்தாளியாகும். பயிர் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கும், சந்தைக்கு வெங்காயம் சீராக வருவதை உறுதி செய்வதற்கும் களை மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாததாகும். இதனால் அவர்கள் குறுகிய இலை மற்றும் அகன்ற இலை களைகள் இரண்டையும் ஒன்றாகக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இது குறித்து இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் விகே. கார்க் கூறுகையில்,

கடந்த ஜூலை மாதம் எங்கள் நிறுவனத்தின் ஹச்சிமேன் என்னும் களைக்கொல்லி அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது புதிதாக ஆக்சிம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வரும் ரபி பருவத்தில் மேற்கு மண்டலத்தில் உள்ள மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள வெங்காய விவசாயிகளுக்கு ஆக்சிம் சிறந்த களைக்கொல்லியாக இருக்கும். ஹச்சிமேனுக்கு கிடைத்த வரவேற்பைப் போல, இதற்கும் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.