பாப் இசைப் பாடலுக்கு நடனம் ஆடிய ரோபோ!

40 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பாப் இசைப் பாடலுக்கு ரோபோ அச்சுப்பிசகாமல் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு ரோலிங் ஸ்டோன் குழுவினரின் டாட்டூ யூ என்ற இசை ஆல்பம் வெளியானது. இந்த ஆல்பம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் பாஸ்டனில் உள்ள ரோபோ நிறுவனம் தனது ரோபோக்களை அதன் தாளத்திற்கு ஏற்ப ஆட்டுவித்தது.

40 ஆண்டுகளுக்கு முன் ஆடியவர்களுக்கு என்ன உடல் மொழி இருந்ததோ, அதேபோல் இந்த ரோபோக்களும் தற்போது அட்சரசுத்தமாக நடனமாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.