அத்வைத் தாட் அகாடமியில் சைபர் அட்டாக் குறித்த கருத்தரங்கம்

உடையாம்பாளையம் அருகில் அமைந்துள்ள அத்வைத் தாட் அகாடமி (Adwaith Thought Academy) பள்ளியின் கருத்தரங்குக் கூட்டத்தில் இணையதளம் மற்றும் திறன்பேசிகளில் நிகழும் சைபர் அட்டாக் தொடர்பான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர காவல் – இணையவழி குற்றவியல் நிபுணர் மற்றும் சைபர் ஹேக்கர் ரவிச்சந்திரன் அவர்களால் அத்வைத் குழுமத்தின் அலுவலர்கள் சுமார் 60 பேருக்கு இணையவழி மற்றும் அலைபேசி வழியாக தகவல் திருடுவது மற்றும் தகவலை செயலிழக்கம் செய்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் அத்வைத் டெக்ஸ்டைல்ஸ், அத்வைத் ஹோம் டிவிஷன், அத்வைத் இன்டஸ்ட்ரீஸ் , டைட்டான் பெயிண்ட்ஸ் & கெமிக்கல்ஸ், லட்சுமி ரிங் டிராவல்ஸ், ஶ்ரீகாரா என்ஜினியரிங் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், அத்வைத் தாட் அகாடமி பள்ளி, ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளியின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் இன்றைய காலத்திலும், இனிவரும் காலத்திலும் இணையவழி பயன்பாட்டை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது என்பது குறித்து கூறப்பட்டது.