டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப்பொருட்களை வழங்கிய வானதி!

டெல்லி கௌதம் நகரில் செவ்வாய்கிழமையன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி மற்றும்  டெல்லி பாஜக மாநில செயலாளர் சுமித்ரா அவர்களுடன் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

இதில் பயனாளிகளுக்கு இலவசமாக கண்ணாடி, காது கேட்கும் இயந்திரம் மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.