கங்கா செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

“தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செவிலியர்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும்”

கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டய படிப்பில் இணையும் முதலாம் ஆண்டு மாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழா (Lamp Lighting Ceremony) நடைப்பெற்றது. கங்கா செவிலியர் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ரமா ராஜசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் துணை தலைவர் குமுதா பழனிசாமி, மற்றும் கல்லூரியின் டீன் மற்றும் கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான் ஆகியோர் முதலாம் ஆண்டு பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டயபடிப்பு மாணக்கர்களின் கையில் உள்ள விளக்கின் ஒளியை ஏற்றி வைத்தார்கள்.

தாங்கள் ஒரு அர்பணிப்பு உள்ள செவிலியராக கடமையாற்றுவோம் என்று துணை முதல்வர் புஷ்பா கூற மாணக்கர்கள் அதை உறுதிமொழி எடுத்தார்கள்.

தலைமை விருந்தினராக பங்கேற்ற கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர், புனரமைப்பு மைக்ரோ சர்ஜரி & தீக்காயம், டாக்டர்.எஸ்.ராஜசபாபதி தனது உரையில்: ஒவ்வொரு செவிலியரும் தங்கள் தொழிலில் இருக்க வேண்டிய தன்னலமற்ற சேவையை வலியுறுத்தினார். தகவல் தொடர்பு திறன், உணர்ச்சி நிலைத்தன்மை, ஆலோசகர், கல்வியாளர் போன்ற அடிப்படை குணங்கள் இருக்க வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செவிலியர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த வேண்டும். மேலும் நோயாளியின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிறப்பு அழைப்பாளர் குமுதா பழனிசாமி பேசும் போது, செவிலியர் மாணக்கர்கள் சமூக அக்கறை, ஏழை நோயாளிகளிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். செவிலியர் பணியின் முக்கியத்துவத்தையும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மற்றும் கற்பிக்கவும், நோயாளியை கவனிப்பதற்கான ஆர்வம், பணிவு, நெறிமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்,

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைச்சார்ந்த செவிலியர்களின் சேவையை காட்சிப்படுத்தும் விதமாக கொலு வைக்கப்பட்டது. விழாவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் “கை விளக்கு ஏந்திய காரிகை” என்பதை விளக்கும் வகையில் மாணவி ஒருவரும், புதுமையான புதியசகாப்தத்தை சித்தரிக்கும் வகையில் விண்வெளி கப்பலில் விண்வெளி செவிலியராக ஒருவரும் தத்ரூபமாக காட்சிப்படுத்தினார்கள்.