கோவை மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ஆய்வு

கோவை மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை எழுத சிறைவாசிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சிறை கைதிகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு உள்ளது. 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வெடிகுண்டு வழக்கு, தேசதுரோக வழக்கு, கொடும் குற்றம் இப்படி அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது, இது போன்றவர்களை ஆய்வு செய்து வருகிறோம். இது போன்றவர்களை களைத்து விட்டு பட்டியலை தயாரித்து வருகிறோம். 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றார்.