கோவையில் தென்னிந்தியா குழுமத்தின் புதிய பர்னிச்சர் ஷோரும் தொடக்கம்

தென்னிந்தியா குழுமத்தின் புதிய பர்னிச்சர் ஷோரும் கோவையில் தொடங்கப்பட்டது. இதில் வீட்டின் அழகை மேலும் கூட்டுவதற்கென இந்திய அளவில் பிரபலமான பெண்ட் சேர் நிறுவனத்தின் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

பாபுலால் ஜெயின் தலைமையில் இயங்கும் தென்னிந்திய குழுமம், வீடுகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஹார்டுவேர் நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் தென்னிந்திய குழுமத்தில் மேலும் ஒரு பிரிவாக புதிய தலைமுறைக்கான பர்னிச்சர்களுக்கான பென்ட் சேர் ஷோருமைதொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில், சங்கர் அசோஷியேட் நிறுவனத்தின் புகழ்பெற்ற கட்டுமான நிபுணர் டி.எஸ் ரமணி சங்கர் மற்றும் சித்தார்த் சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஷோருமை தொடங்கி வைத்தனர்.

இது குறித்து ஷோரூமின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், மேக் இன் இன்டியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பென்ட்சேர் புதிய தலை்முறைக்கான ஷோருமில், நவீன மரச்சாமன்கள், விளக்குகள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவை, விருப்பத்திற்கு ஏற்ப, அனைத்து உள் அலங்காரம் மற்றும் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்பதே இந்த ஷோருமின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

கோவையில் செயல்பட்டு வரும், சவுத் இன்டியா குழுமம், ஹார்டுவேர், டைல்ஸ், மாடுலர் கிச்சன் உள்ளிட்ட அனைத்து உள் அலங்கார பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. 2005 ல் சவுத் இன்டியா ஹார்டுவேர் தொடங்கப்பட்டு, 2019ல் சவுத் இன்டியா குழுமத்தின் கீழ் வந்தது. பர்னிச்சர் ஷோரும் மட்டுமின்றி, கோவை, ஆர்.எஸ்.புரத்தில், டைல்ஸ் ஷோரும் ஒன்றையும் தொடங்கியுள்ளது. கோவையில் விரிவாக்க நடவடிக்கையாக இந்த குழுமம், மேலும் சில விற்பனையகங்களை வரும் நாட்களில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.