குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு: விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தேனி முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உடன், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வெங்கடேசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், தேனி ஏ.எச்.எம். டிரஸ்ட் நிர்வாகி முகமது இப்ராஹீம், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.