ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைப்பு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. விழாவில் வணிகவியல் துறைத்தலைவர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கிப் பேசுகையில் மாணவியர் கல்வி கற்கும்போது அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்வதோடு அவற்றை நடைமுறைப்படுத்தவும் பயிற்சி பெறவேண்டும் என்றும் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் புதுமைகளை உருவாக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பிளான்ட் பயோடெக்னாலஜி மற்றும் சைட்டோஜெனிடிக்ஸ், மரபியல் மற்றும் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், கோவை மற்றும் அறிவியல் அறிஞர், ரேகா.ஆர்.வாரியர், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசும்போது மாணவியர் தங்கள் துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் தேவைகளையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதுநிலை படிக்கும் மாணவியர் அறிவுத்தேடலோடு தங்களது வாழ்க்கை குறித்த பொறுப்புணர்வையும் உணரும்போது சிறப்பாக வெற்றி பெறமுடியும் என்றார்.