மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தியும், கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் எனவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை கோவையில் நிறுவ வலியுறுத்தியும், தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், மூவேந்தர் மக்கள் பொது நலச்சங்கம் உள்ளிட்டோர் மத்திய மாநில அரசை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தின் மாநில தலைவர் கண்ணன், பொருளாளர் முரளிக்குமார், மூவேந்தர் மக்கள் பொதுநல சங்க தலைவர் எழில் பாண்டியன், நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்கம் மாநில தலைவர் ஜெயக்குமார், செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.