பூம்புகாரில் கொலு கண்காட்சி

கோவை: நவராத்திரியை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இங்கு காகித கூழ் பொம்மைகள், மண் பொம்மைகள், சுட்ட பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், கொல்கத்தா பொம்மைகள் மற்றும் எண்ணிலடங்கா கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.