அரசுப் பள்ளிக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி வெரைட்டி ஹால்‌ சாலையிலுள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவ, மாணவிகளின்‌ கல்வி கற்றல்‌ திறன்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா (30.09.2021) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கல்வி கற்றல்‌ திறன்‌ குறித்து மாணவ, மாணவிகளின்‌ திறனைக்‌ கண்டறிய செய்தித்தாள்‌ வாசிப்பு மூலமும்‌ கரும்பலகை மூலமும்‌ கணித திறன்‌ குறித்தும்‌ தங்களது திறனை வெளிப்படுத்துமாறு எடுத்துரைத்தார்‌.

மிகச்சிறப்பாகக் கல்வித்திறனை வெளிப்படுத்திய மாணவிக்கு புத்தகம்‌ வழங்கி பாராட்டினை தெரிவித்தார்‌.

தொடர்ந்து, அப்பள்ளியில்‌ உள்ள நூலகத்தில்‌ ஆய்வு மேற்கொண்டு, நூலகத்தில்‌ வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்‌ குறித்துக் கேட்டறிந்த பின்னர்‌, பள்ளியின்‌ கழிப்பறை வசதி, குடிநீர்‌ வசதி குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.