தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பட்டயப்படிப்பு சேர்க்கை நாளை தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு உறுப்புக் கல்வி நிலையங்களிலும், மூன்று அரசு இணைப்பு கல்வி நிலையங்களிலும் மற்றும் பத்து தனியார் இணைப்பு கல்வி நிலையங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றது.

இப்பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 01.10.2021 தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்புக் கல்வி ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை, உறுப்புக் கல்வி நிலையமான குமுளூரில் தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையினால் தளி, மாதவரம் மற்றும் ரெட்டியார் சத்திரம் ஆகியவற்றில் நடத்தப்பட்டு வந்த தோட்டக்கலை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தின் அரசு இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் நடப்பு ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழத்தின் இணையதளத்தில் (https://tnau.ac.in/diplomaadmission/) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு: 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346