பரளிக்காடு சுற்றுலா செல்ல அனுமதி – வனத்துறை

கோவை மாவட்டத்தில் உள்ள பரளிக்காடு சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

பரளிக்காடுசூழல்‌ சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய 28ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகிறது. மேலும்‌ பரளிக்காடு சுற்றுலாத்தலத்தில்‌ கொரோனா வழிகாட்டு நடைமுறைகள்‌ கடைபிடிக்க வேண்டும்‌.

காரமடை வனச்சரகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ பரளிக்காடு சூழல்‌ சுற்றுலாத்தலத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்த அறிக்கை

  •  சுற்றுலாப்பயணிகள்‌ www.coimbatorewildrness.com என்ற இணையதளம்‌ மூலம்‌ முன்பதிவு செய்ய வேண்டும்‌.கட்டணம்‌ பெரியவர்களுக்கு ரூ.550: சிறியவர்களுக்கு (5 வயது முதல்‌ 13 வயது வரை) ரூ.450.
  • சுற்றுலாவிற்கு அனுமதிக்கப்படும்‌ நாள்கள்‌-சனி மற்றும்‌ ஞாயிறு. அனுமதிக்கப்படும்‌ நேரம்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை. பயணிகள்‌ தங்கள்‌ சொந்த வாகனங்களில்‌ பரளிக்காடு சுற்றுலாத்தலத்திற்கு செல்லலாம்‌ அல்லது பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தலாம்‌.
  • பரிசல்‌ பயணம்‌-பவானி ஆற்றில்‌ பரிசலில்‌ பயணம்‌ செய்து பில்லூர்‌ அணையின்‌ அழகை கண்டு களிக்கலாம்‌.
  • மதிய உணவு-பழங்குடி மக்களால்‌ நேர்த்தியான முறையில்‌ தயாரிக்கப்பட்டு சுற்றுலாவிற்கு வருகை தரும்‌ பயணிகளுக்கு வழங்கப்படும்‌.
  • மாலை-பவானி ஆற்றில்‌ குளியல்‌
  •  மாலை 4.00 மணிக்கு சுற்றுலா முடிந்து திரும்புதல்‌

இவ்வாறு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.