ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் உதவித்தொகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை தாங்கினார் .முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக வசந்த குமார் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக சுமார் பதிமூன்று மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் இக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முகமது ஜக்காரியா நினைவாக மூன்று மாணவர்களுக்கு ஒரு வருட படிப்பு கட்டணத்தை 1998ம் ஆண்டு படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் வழங்கினார்கள் .

முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக வீணா ரமேஷ், திலிப் கிருஷ்ணா, பத்மப்ரியா, நாகராஜன் பழனிச்சாமி, பிரசாந்த் ஆகியோர் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் கருப்பசாமி மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ஊக்கத் தொகை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி கொண்டு சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தினார்கள். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் சங்கத்தின் துணை தலைவர் சுதாகர் நன்றி கூறினார்.