1500 தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கும் மாபெரும் தூய்மை பணி முகாம்

கோவையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாபெரும் தூய்மை பணி முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையிலும் மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் 50 கி.மீ சுற்றளவுக்கு மாநகராட்சியின் 81 வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணியைக் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் சுங்கரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூய்மை பணியானது திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட 1500 கி.மீ சுற்றளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் 1500 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வார்டு வாரியாக இவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு பணியினை மேற்கொள்கின்றனர்.

முன்னதாக தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.