‘முல்மினா’ மருத்துவ ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஜக்டேல் ஹெல்த்கேர்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நன்மைகளை வழங்கும் முல்மினாவின் மருத்துவ ஆய்வு முடிவுகளை ஜக்டேல் ஹெல்த்கேர் வெளியிட்டுள்ளது.

ஜக்டேல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் பிரிவான ஜக்டேல் ஹெல்த்கேர் சமீபத்தில் அவர்களின் பிரபலமான பானமான முல்மினா குறித்த மருத்துவ ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது. இது குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரின் நுகர்வுக்கு ஏற்றது. இது நோய் எதிர்ப்பு திறன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட குடிக்க தயாராக இருக்கும் பானமாகும் என பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு, மல்லிகே மருத்துவமனை, குழந்தை நல மருத்துவர் ஆலோசகர் சௌமியா நாகராஜன் கூறுகையில், இந்த மருத்துவ ஆய்வானது புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சுவாச நோய்த்தொற்றுள்ள குழந்தைகளும் முல்மினா மாம்பழம் (மா, கோட்டு கோலாசெண்டெல்லா ஆசியாடிகா மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் கலவை) மூலம் நிர்வகிக்கப்ப்பட்டது.

நிலையான சிகிச்சை நெறிமுறையுடன் 14 மற்றும் 28 நாட்களில் ஆக்ஸிஜனேற்ற குறிப்பான்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறிப்பான்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. கூடுதலாக, இந்த ஆய்வுகள் சி – ரியாக்டிவ் புரதம் (சிஆர்பி) போன்ற அழற்சி குறிப்பான்களைக் குறைப்பதாகவும், மொத்த ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

ஜக்டேல் இண்டஸ்ட்ரீசின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜக்டேல் பேசுகையில், “உலக அளவில் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட தயாரிப்புகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். அவை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன மற்றும் மக்களின் பொதுவான வாழ்க்கை முறைக்கு எளிதில் பொருந்தக் கூடியவை ஆகும் என்றார்.