மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற சேரன் நர்சிங் கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சி கவுன்சில் உத்தரவுப்படி, சேரன் நர்சிங் கல்லூரி பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தெலுங்குபாளையம் மற்றும் செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பங்கேற்றனர்.

18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாத அனைத்து தகுதியுள்ள மக்களையும் உள்ளடக்கி, செப்டம்பர் 12, அன்று “ஒரு நாளில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி” என்ற மெகா தடுப்பூசி முகாமில் இறுதியாண்டு மற்றும் முன் இறுதியாண்டில் இருந்து மொத்தம் 54 மாணவர்கள் பங்கேற்றனர்

நர்சிங் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தைப் பெற இந்த முகாம் உதவியது. இந்த முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தடுப்பூசி போட்டனர்.