பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்த வானதி

கோவை புலியகுளம் அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களிடம் நலம் விசாரித்து, பணியாளர்கள், மற்றும் செவிலியர்களிடம் பாதுகாப்பான பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக கோவை பந்தய சாலையில் நடைபயிற்சிக்கு வருபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அம்மன்குளம் பகுதிகளில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை குறித்த புகார்களை பெற்றுக்கொண்டு அதனை ஒட்டிய வீட்டு வசதி வாரிய வீடுகளில் உள்ள பொது மக்களின் குறைகள், முதியோர் பென்ஷன், வீடுகளுக்கு அருகில் உள்ள பொது இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பது குறித்து கலந்து ஆலோசித்தார்.