வி ஆஃப் உடன் இனி வி மூவிஸ் மற்றும் டிவி செயலி

தொலைத்தொடர்பு நிறுவனமான வி, தனது மொபைல் அப்ளிகேஷனான வி மூவிஸ் மற்றும் டிவி ஆஃப்-ஐ தனது வி ஆஃப் உடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இந்த இரு மொபைல் அப்ளிகேஷன்களின் ஒருங்கிணைப்பின் மூலம் வி வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், வெப் சீரியல்கள் மற்றும் அசல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி ஸ்ட்ரீம் செய்து கண்டுகளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இதன் மூலம் தற்போது வழங்கி வரும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் கூடுதலாக அசல் பொழுதுபோக்கு படைப்புகளையும் வழங்கும் ஒரு மாபெரும் தளமாக வி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.

ஜீ டிவி, ஜீ சினிமா, கலர்ஸ் ஹெச்டி, கலர்ஸ் இன்ஃபினிட்டி, டிஸ்கவரி, எம்டிவி, ஹிஸ்டரி டிவி, சன் டிவி, ஜீ பங்களா, அனிமல் ப்ளானட், நிக் உள்ளிட்ட 450 பிளஸ் நேரடி டிவி சேனல்கள் இதில் அடங்கும்.

ஆஜ் தக், இந்தியா டிவி, சிஎன்பிசி ஆவாஸ், ரிபப்ளிக் டிவி, ஏபிபி நியூஸ், என்டிடிவி 24ஃ7, சிஎன்என் நியூஸ் உள்ளிட்ட நேரடி செய்திகள் சேனல்களும் இதில் அடங்கும்.

வூட் செலக்ட், டிஸ்கவரி, லயன்ஸ் கேட் ப்ளே, சன்நெக்ஸ்ட் மற்றும் ஷெமரூ மீ போன்ற ழுவுவு அப்ளிகேஷன்களில் இருந்து ப்ரீமியம் படைப்புகளை, நிகழ்ச்சிகளைக் கண்டுக்களிக்க முடியும்.

இந்த மேம்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த அனுபவம் தற்போது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு லைவ்வாக கிடைக்கிறது. மேலும் மிக விரைவிலேயே ஐஒஎஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.