பள்ளி கல்லூரிகள் திறப்பு: தூய்மைபடுத்தும் பணி தீவிரம்

செப் 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதால் கோவையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கிருமி நாசினிகள் கொண்டு தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிமுறைகள் வாட்ஸ் மூலம் அனுப்பப்படுகிறது. அதே போல் கடந்த 3 நாட்களாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.