யாருக்கெல்லாம் பூஸ்டர் டோஸ் தேவை?

கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டு வருகிறது. இந்தியவில் உருமாறிய டெல்டா மற்றும் டெல்டாபிளஸ் வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. தடுப்பூசி கண்டுபிடித்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பரிந்துரைக்க பட்ட நிலையில் இப்போது பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்து, பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மக்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தி வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்து கொள்வதன் மூலம், கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஆண்டிபாடிகள் உடலில் உருவாகும். ஒரு சிலருக்கு இந்த ஆண்டிபாடிகள் ஆனது குறிப்பிட்ட நாட்கள் தான் செயல்புரியும். அதன் பிறகு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மீண்டும் இது போன்ற வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அறிமுக படுத்த பட்டுள்ளது. இந்த பூஸ்டர் டோஸை வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் எடுத்து கொண்டால் போதுமானது. ஆறு மாத இடைவெளியில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அனுமானிக்க படுகிறது.

இஸ்ரேலில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ்கள் போடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் போடுவதற்காக ஃபைசர் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த பூஸ்டர் டோஸ் போடுவதற்காக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த ஆராய்ச்சி தொடங்கியது, நவம்பர் மாதத்தில் இந்த முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.