நேரு கலை அறிவியல் கல்லூரி- உலக மகளிர் தின விழா

நேரு கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று (07.03.18) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர் எம்.கனகரத்தினம் வரவேற்புரையாற்றினார். நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அதிகாரியும், செயலாளருமான டாக்டர் பி.கிருஷ்ண குமார் தலைமை வகித்தார். தாளாளர் டாக்டர் சைதன்யா கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வராஜ் தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.அனிருதன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக யோகா ஆசிரியர் பத்மஸ்ரீ நாணம்மாள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி செய்முறை விளக்கமளித்தார். மேலும், அவர் பேசுகையில்: யோகா செய்வதன் மூலம் உடலில் நோய்கள் ஏற்படாது. அப்படி செய்வதால் 100 வருடங்கள் வரை உயிர் வாழலாம். இப்போது எனக்கு 99 வயது நடக்கிறது. இது வரை ஆங்கில மருந்துகளை நான் உட்கொண்டதில்லை. எனக்கு 6 குழந்தைகள், அனைவருமே சுகப்பிரசவம் தான். யோகா செய்யாவிடில் இனி வரும் காலங்களில் நாட்டில் செயற்கை கருவுரு மையங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

விழாவில், நாணம்மாளின் நான்காவது மகன் பாலகிருஷ்ணன் எழுதிய காலை எழுந்தவுடன் யோகா என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. நிறைவில், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு.செல்வநாயகி நன்றி கூறினார்.