கேஜிஎஃப் 2 ரீலிஸ் தேதி அறிவிப்பு

கேஜிஎஃப் 2 பாகம் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கன்னடத்தில். உருவான கேஜிஎஃப் முதல் பாகம் 5 மொழிகளில் உருவாகி தேசிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும், கன்னட திரை வரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். 2 ம் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கேஜிஎஃப் 2 ம் பாகம் 2022 ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இது வெளியிடப்படுகிறது. கேஜிஎஃப் சேப்டர் 1 ன் வெற்றிக்கு அதில் இடம்பெற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் முக்கிய காரணம். இரண்டாவது பாகத்தில் சஞ்சய் தத் வில்லன் பொறுப்பை ஏற்றுள்ளார்.