ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான விருதுகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி புது தில்லியில் உள்ள இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேஷன் அமைப்பால் மாநில அளவிலான சிறந்த மாணவர், மாணவியர் விருது, சிறந்த ப்ராஜெக்ட் விருது மற்றும் சிறந்த ஆசிரிய – ஆலோசகர் விருது ஆகிய மூன்று விருதுகளை இக்கல்லூரி பெற்றுள்ளது.

மாணவர்களின் கல்வி மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளில் முழுமையான செயல்திறனின் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு (ஐ.எஸ்.டி.இ) அமைப்பின் மாநில அளவிலான சிறந்த மாணவர் விருதினை இவ்வமைப்பு வழங்குகிறது.

2020ம் ஆண்டிற்கான ஐ.எஸ்.டி.இ அமைப்பின் சிறந்த மாணவர் விருதை இக்கல்லூரியில் பயிலும். இறுதி ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர் வருண் மற்றும் இறுதி ஆண்டு சிவில் இன்ஜினியரிங் துறை மாணவி ஷ்ருதி ஆகியோர் இவ்விருதினை பெற்றுள்ளனர்.

மேலும் இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவிகள் செரினா கிளாரிட்டா, டாரத்தி, நர்மதா, வாசுகி மற்றும் இந்துமதி ஆகியோர் “போஸ்ட் கோவிட் வெப்பநிலை அளவீட்டு வருகை பதிவு” என்ற தலைப்பில் நடைபெற்ற ப்ராஜெக்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

2020 ஆண்டிற்கான (ஐ.எஸ்.டி.இ) மாநில அளவிலான சிறந்த மாணவர் அமைப்பு – ஆசிரிய ஆலோசகர் விருது இக்கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறைத் தலைவர் வனிதாவுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

விருது பெற்ற அனைவரையும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி, கல்லூரி முதல்வர் உமா, துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.