டாக்டர்.என்.ஜி.பி. கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

டாக்டர்.என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல்  (தொழில் முறை கணக்கீட்டியல்) துறையின் சார்பாக “தற்போதைய வங்கியல் துறையில் உள்ள தடைகள்” குறித்த தேசிய கருத்தரங்கம் இன்று (28.2.2018) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்  மருத்துவர் நல்ல பழனிசாமி கல்லூரியின் தலைவர் மற்றும் செயலர் தவமணி பழனிசாமி ,கல்லூரியின் முதன்மை செயலர் முனைவர்  ஓ. டி புவனேஸ்வரன்,   பி. ஆர் . முத்துசாமி முதல்வர் , கி. துரைராஜ், துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்தரங்கில்  பேராசிரியர் , முனைவர்  கே. வனஜா வணிகவியல்    ( தொழில் முறை கணக்கீட்டியல் ) துறையின் துறை  தலைவர் வரவேற்புரை ஆற்றினார் .

கருத்தரங்கின் முதல் அமர்வில் எஸ். பழனிசாமி , சென்ட்ரல் பாங்க் ஒப் இந்தியா, கோயம்புத்தூரின் ,ஓய்வுபெற்ற மண்டல மேலாளர் அவர்கள்   “இந்திய வங்கி துறையின் மைல்கற்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடினார். இரண்டாம் அமர்வில் “இந்திய வங்கி துறையின் மாற்றங்கள்” குறித்து மனு எ. ராஜன் ஆக்ஸிஸ் வங்கியின் கோவை மண்டல  துணை தலைவர் , பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். கருத்துதரங்கில் கேரளம் , பெங்களூரு , மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும்  சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து  மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் .