எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்டின் 136-வது நிறுவனர் பிறந்ததின விழா

எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்டி ரங்கசாமி நாயுடு அவர்களின் 136-வது பிறந்த தின விழா இன்று (27.2.2018) கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர்கள் நரேந்திரன் மற்றும் சுந்தர் கலந்து கொண்டனர். தியாகராஜர் கல்வி நிறுவனங்கள், தியாகராஜர் மில்ஸ் தலைவர் கருமுத்து கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கண்கவர் சிலம்பாட்டம், பரதம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ராமகிருஷ்ணா பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.