அன்னை தெரசா பல்கலையில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் மனையியல் துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி இன்று (27.02.18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துளசி பார்மெடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் எம்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்: மாணவர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்கால லட்சியத்தை தீர்மானித்துக் கொண்டு அதற்கான பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. இந்த வேலையே போதும் என்ற மனப்பாங்குடன் லட்சியத்தை மறந்து வேறு பாதையில் செல்லாதீர்கள். இந்த ஆண்டு படித்து விட்டு, அடுத்த ஆண்டு அது பற்றிய கேள்வி கேட்கும் பொழுது மறந்து விட்டேன் என்று கூறாதீர்கள். மறப்பதற்காக படிக்காதீர்கள். வாழ்க்கையில், தேவையான இடத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை பயன்படுத்துங்கள். ஆகவே கல்லூரிகளில் படிக்கும் பொழுதே, உங்களை நீங்கள் புரிந்து கொண்டு, உங்ககே உரித்தான திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேறுங்கள். ஏனென்றால் போட்டிகள் நிறைந்த உலகம் இது என்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.