வேளாண் பல்கலை மாணவி பரதநாட்டியத்தில் தேசிய அளவில் சாதனை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவி சுபிக்ஷா பாரம்பரிய பரதநாட்டிய நடனத்தில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

சுபிக்ஷா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டாமாண்டு தோட்டக்கலை படிப்பை பயின்று வருகிறார்.

இவர் தேசிய அளவில் “சிறந்த பரதநாட்டிய கலைஞர்” என்ற சாதனைப் பதிவை 29.06.2021 அன்று 7 மணி நேரம் தொடர்ந்து 2 பரதநாட்டிய நடனமாடி இந்த மகத்தான சாதனையைப் பெற்றுள்ளார்.

மேலும் சாதனையாளர் பட்டியலில் இவரது பெயர் – மேஜிக் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.