ஆடி வெள்ளியன்று அம்மன் மடியில் அமர்ந்த கிளி !

ஆடி வெள்ளிக்கிழமையான இன்று (30.07.2021) கோவையில் அம்மனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தபோது கிளி ஒன்று அம்மன் மடியில் அமர்ந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள் அந்த வகையில் ஆடி மாதம் துவங்கியது முதல் அம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் நடைபெற்று வருகிறது.

ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை என்பதால் இந்த நாளில் பல்வேறு கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஆடி வெள்ளிக்கிழமையான இன்று கோவையை அடுத்த இருகூர் பகுதியில் உள்ள மாசணியம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அப்போது கோவில் மூலதானத்திற்குள் நுழைந்த கிளி ஒன்று அம்மன் மடியில் அமர்ந்தது. இந்த காட்சி அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.