கே.பி.ஆர் கல்லூரியில் “கல்வி முன்னோக்கிய பயணம்” – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரி வணிகவியல் துறை ஏற்பாடு செய்த ஏழு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்பயிற்சி ”கல்வி முன்னோக்கிய பயணம்” எனும் தலைப்பில் இணையவழியில் (14.7.21 முதல் 22.7.2021) நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை காலத்தின் தேவை குறித்தான செய்தி வழங்கி சிறப்பித்தார்.

முதல்நாள் நிகழ்விற்கு, பொள்ளாச்சி, N.G.M. கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை முன்னாள் பேராசிரியர், கணேஷன் கலந்து கொண்டு “ஒரு சிறந்த ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு உற்சாகமான உரை நிகழ்த்தினார். டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், மற்றும் ஆசிரியர்களிடமிருந்து நடைமுறை குறித்தான கருத்துக்களை சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

இரண்டாம் நாளில், Bangalore Building Predict Easy Pass Director of Data Science & Artificial Intelligence Cleverinsight இயக்குநர் பாஸ்டின் ராபின் கலந்து கொண்டு தனது உரையின் மூலம் தரவு பகுப்பாய்வு எவ்வாறு செய்வது,? தரவுப்பகுப்பாய்வுக்கான ஆலோசனை, தரவு அறிவியல் தொடர்பான நிகழ் நேர வழக்கு ஆய்வுகளை விளக்கிக்கூறியதுடன், இது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என எடுத்துரைத்தார்.

மூன்றாம் நாளில் பொள்ளாச்சி, NGM, கல்லூரியின் வணிகவியல் முதுகலைத்துறை முன்னாள் பேராசிரியர், சிராஜுதீன் கலந்து கொண்டு “கற்பித்தல் முறைகள்” எனும் தலைப்பிலான உரையில் பணியாளர் மன உறுதியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தெளிவுபடுத்தினார். மன உறுதியைப்பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கும் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்கள் என்பதை டாக்டர். அப்துல்கலாம் அவர்களை மேற்கோள் காட்டி சிறப்பித்தார்.

நான்காம் நாளில் பெங்களூர், ஜெயின் பல்கலைக்கழகம், இணைப்பேராசிரியர், வணிகவியல் துறை மஞ்சு பிரியா “இணையவழி கற்றல் கற்பித்தலுக்கான மென்பொருள் கருவிகள்” எனும் தலைப்பில் PPT Slide எவ்வாறு வழங்குவது, பட விளக்கப்படங்கள், அனிமேஷன் மற்றும் வீடியோக்களைக் காண்பிப்பது எப்படி?, மின் கற்றல் வளங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி விளக்கிக் கூறினார்.

ஐந்தாம் நாளில், திருப்பதியைச் சார்ந்த கார்ப்பரேட் சட்ட ஆலோசகர், மேலாண்மை கணக்காளர், இணை நிறுவன செயலர், பாலாஜி ரவிகோபால் கலந்து கொண்டு “வரிவிதிப்பு சட்டம் மற்றும் நடைமுறைகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான பயிற்சி, முதலீட்டு வழிகள் மற்றும் விலக்கு மற்றும் வருமான வரியில் தள்ளுபடி ஆகியவற்றின் விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

ஆறாம் நாளில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இணைப்பேராசிரியர், முதன்மையர் (பொறுப்பு), வர்த்தகத்துறை வேல்முருகன் “ஆராய்ச்சியின் தரமான முறைகள்” என்ற தலைப்பில் தனி நபர்கள், சங்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள், மொழி, தகவல் தொடர்பு ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தக்கூறியதுடன், உரை, படம் மற்றும் எண் வடிவ தரமான தரவுகள், ஆராய்ச்சி வகைகளைப்பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஏழாம் நாளில், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுகள் துறை பேராசிரியர். லலிதா ராமகிருஷ்ணன் “கோவிட் நெருக்கடியின் போது கார்ப்பரேட்டுகளின் திருப்புமுனை உத்திகள்” எனும் தலைப்பில் கோவிட் காலப் பாதுகாப்பு, கோவிட்டைத்தடுப்பது எப்படி? என்பது பற்றி விளக்கிக்கூறினார்.