‘மெர்சிடிஸ் பென்ஸ்’ காரை பரிசாக தரும் ஹெச்.சி.எல் !

முன்னணி ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ காரை பரிசாக தர மீண்டும் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம் கடந்த 2013 – ம் ஆண்டில் 50 பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி வி.வி.அப்பாராவ் தெரிவித்துள்ளார்.