உலகின் சிறந்த 20 விமானங்களின் பட்டியல் வெளியீடு

கத்தார் ஏர்வேஸ் 2021ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏர் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி, கொரோனா தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட கத்தார் ஏர்வேஸ், உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக திகழ்கிறது என்று விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் சிறந்த 20 விமானங்களின் பட்டியல்:

கத்தார் ஏர்வேஸ்,

ஏர் நியூசிலாந்து,

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்,

குவாண்டாஸ்,

எமிரேட்ஸ்,

கேத்தே பசிபிக்,

விர்ஜின் அட்லாண்டிக்,

யுனைடெட் ஏர்லைன்ஸ்,

ஈ.வி.ஏ ஏர்,

பிரிட்டிஷ் ஏர்வேஸ்,

லுஃப்தான்சா,

ஏ.என்.ஏ,

ஃபின்னைர்,

ஜப்பான் ஏர் லைன்ஸ்,

கே.எல்.எம்,

ஹவாய் ஏர்லைன்ஸ்,

அலாஸ்கா ஏர்லைன்ஸ்,

விர்ஜின் ஆஸ்திரேலியா,

டெல்டா ஏர் லைன்ஸ்,

எட்டிஹாட் ஏர்வேஸ்

ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸின் குழு தலைமை நிர்வாகி கூறுகையில், விமானத் துறையால் இதுவரை கண்டிராத சில இருண்ட நாட்களைக் கண்டதாகவும், ஆனால் தோஹாவை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. எனவே, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸை தேர்வு செய்தற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.