தமிழ்நாடு பிரீமியர் லீக் ஐந்தாவது சீசனில் பார்ட்னராகும் ‘கூ ஆப்’

ஸ்ரீராம் கேபிடல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல் ) ஐந்தாவது சீசனின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக “கூ ஆப்” இணைகிறது.

மேலும் போட்டி நடைபெறும் போது, ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு உள்ளடக்கத்துடன் கூ ஆப் வருகிறது. டி.என்.பி.எல் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் (டி.என்.சி.ஏ) தளத்தில் கணக்குகளைத் திறப்பதைத் தவிர, கூ ஆப் வீரர்கள், உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் செய்தி கையாள்பவர்கள், பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கலந்துரையாடல்களையும், புதுப்பிப்புகளையும், பதிவுகளையும் காணலாம்.

மேலும் “Kooofthematch” போன்ற தனித்துவமான ஹேஷ்டேக்கின் மூலம் போட்டிகளின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க கூ ஆப் பயனர்களுடன் வர்ணனையாளர் ஈடுபாடுகளைக் கொண்டுள்ளது, போட்டியின் போது கூ ஆப் வாக்கெடுப்பு மற்றும் பல விஷயங்களுக்கு கவர்ச்சிகரமான டி.என்.பி.எல் பொருட்களை வெல்லலாம்.

கூ ஆப் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறுகையில்,
“ கிரிக்கெட் ஒரு விளையாட்டாக எப்போதும் நம் தேசத்தை ஒன்றிணைத்து வருகிறது. இது ஒற்றுமை என்ற உணர்வைக் குறிக்கிறது. கூ ஆப் ஒரு விளையாட்டோடு இணைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன் ஒருபோதும் தமிழக மக்கள் தங்களுக்கு பிடித்த அணிகளைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உற்சாகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றதில்லை.

டி.என்.சி.ஏ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில், “கூ ஆப்வுடன் இணைவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது குறுகிய காலத்தில் நாட்டில் ஒரு வலுவான குறுகிய செய்தி தளமாக வளர்ந்துள்ளது. இது டி.என்.பி.எல்-ஐ கிரிக்கெட் ரசிகர்களிடம் சேர வைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ” என்று கூறினார்.