இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்க மாடர்னா நிறுவனம் 75 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், “உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது,” எனத் தெரிவித்தார். ஆனால், இந்த தடுப்பூசிகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.