“கோவையில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட உள்ளது”

கோவைக்கு வருகைதந்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சின்னியம்பாளையத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து போட்டி அளித்த அவர்,
தமிழகத்தில் ஜிகா வைரஸ் ஒருவருக்கு கூட கண்டறியப்படவில்லை என்றும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் தொகையை தனியார் மருத்துவமனைகளோடு இணைத்து  அந்த நிதியை தொழிலாளர்களுக்கு என்று ஒதுக்கி தனியார் மருத்துவனையிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார்.

தொடர்ந்து, கே.எம். சி.ஹெச் கலையரங்கத்தில் நடைபெற்ற விரிவான முதலைமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுமான கொரோனா தடுப்பூசி தேவைகள் குறித்து மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

117 மருத்துவமனைகளின் நிர்வாகிகள் கலந்துகொண்ட இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், கோவையில் இருந்து நான்கில் ஒரு பங்கு நிதி கொடுத்து, நிதிவழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது, தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் முதல் இடத்தில் உள்ளது, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது. அதைபோல் தடுப்பூசி செலுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது.

தடுப்பூசி போடும் பணிக்கு சிஎஸ்ஆர் நிதி இணைப்பு என்ற திட்டத்திற்காக கோவையின் முக்கிய மருத்துவமனைகளான கேஎம்சிஹெச் ரூ.15 லட்சம் , ஜி.குப்புசாமி நினைவு மருத்துவமனை ரூ.7.5 லட்சம் , கேஜி மருத்துவமனை ரூ. 2 லட்சம் , கங்கா மருத்துவமனை ரூ.1.95 லட்சம் வழங்கியுள்ளனர். இது போல இன்னும் சில நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளனர். இதனை அவர்களுக்கே தடுப்பூசியாக வழங்கி அதனை மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

கோவையில் முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் துவக்கியுள்ளது. இது ஓரிரு மாதங்களில் இது 100 சதவிகித தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறும்.