டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழுக்கு முதலிடம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி வினா-விடைத்தாள், அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.