வீடியோ கேம் துறையில் கால் பதிக்கும் நெட்ஃபிளிக்ஸ்

உலகம் முழுவதும் பயனாளர்களை கொண்டுள்ள ஒடிடி தளம் நெட்ஃபிளிக்ஸ் . 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தொலைக்காட்சி தொடர் மற்றும் படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்று ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. வெளியீட்டிற்காக காத்திருந்த பல முன்னணி நடிகர்களின் படங்களும் கூட நெட்ஃபிளிக்ஸில் வெளியாகின. வெறும் ஸ்ட்ரீமிங் தளமாக மட்டுமே இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் தற்போது வீடியோ கேம் துறையிலும் கால் பதிக்க உள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியன ‘ஸ்ட்ரேஞ்டர் திங்ஸ்’ என்ற பிரபல வெப் தொடரின் மொபைல் கேம் பதிப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.அதற்கு கிடைத்த வரவேற்ப்பை தொடந்து தற்போது முழு வீச்சில் கேமிங் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக முன்னாள் லக்ட்ரானிக் ஆர்ட்ஸ் மற்றும் பேஸ்புக் நிர்வாகி மைக் வெர்டுவை (Mike Verdu) அதன் வீடியோ கேமிங் மேம்பாட்டு துணைத் தலைவராக நியமித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்நிலையில் பிரபல ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெட்ஃபிளிக்ஸ் வருகிற 2022 ஆம் ஆண்டில் வீடியோ கேம் துறையில் நுழைவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்றும் முதற்கட்டமாக வீடியோ கேம் துறையில் தனது எல்லைகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் சில ஆவண படங்கள் மற்றும் சில குறிப்பிட்ட படங்களை மட்டும் இலவசமாக பார்க்க முடியும். இது நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்களை கவர கையாண்ட ஒரு வழிமுறையாகும்.

இதே போலத்தான் கேமிங் துறையிலும் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகளை மட்டுமல்லாமல் இளைஞர்களையும் குறிவைக்கும் இந்த புதிய திட்டம் ஆரம்பத்தில் இலவச சேவையாக வழங்கப்பட்டாலும் , அடுத்தடுத்து கட்டண சேவையாக மாறலாம் என கூறப்படுகிறது.