
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநரும், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நிறுவனருமான டாக்டர்.பிரதீப் வி.பிலிப் ஐபிஎஸ். கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளியின் 9வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரையாற்றினார். ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற பள்ளியின் கல்வி சேவையைப் பாராட்டி பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் 25வது ஆண்டு வெள்ளிவிழா விருதை பள்ளி தாளாளர் நிர்மலாவிற்கு வழங்கினார். உடன், (இடமிருந்து) பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் பள்ளி சேர்மன் மோகன்லால்பட்டேல். விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 1200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.