திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவை போற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் மணிமண்டபம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க இன்று (20.2.2018) கோயமுத்தூர் மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், வையம்பாளையம் கிராமத்தில் உழவர் பெருந்தகை திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவை போற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தொடங்கி வைத்தார். அருகில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர்  (பொ) துரை.ரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.