சட்டமன்ற நூற்றாண்டு விழா: குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை திங்கட்கிழமை (19.07.2021) நேரில் சந்தித்தார் பின்னர் டெல்லி விமான நிலைத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குடியரசு தலைவரிடம் பேசிய முக்கிய விஷயங்களை பற்றி தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது :

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தலைமை தாங்கி விழாவை நடத்தி தந்திட வேண்டும் எனவும், சட்டமன்ற வளாகத்தில் இடபெறவுள்ள கலைஞரின் படத்தை திறந்து வைப்பதற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் மதுரையில் கலைஞரின் பெயரில் அமைய இருக்கும் நூலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கும், சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கும், நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்க கூடிய வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமையக்கூடிய நினைவு தூண் அடிக்கல் நாட்டு விழாவிற்கும் வருகை தந்து நடத்தி வைக்க வேண்டும் என குடியரசு தலைவரிடம் கேட்டு கொண்டிருக்கிறேன் என்றும் அதற்கு அவரும் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் உடன் டி.ஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் இருந்தனர்.