கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (19.07.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை வடவள்ளி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்களிடம் ஆணையாளர் தெரிவிக்கையில், வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்தினறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, ஆகிய பணிகளை கண்டறியும்போது, அதன் விபரங்களை கோவிட்-19 களஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்த பின்னர் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உள்ளது கண்டறியப்பட்டால், உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் வீட்டில் உள்ள அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகாமல் இருக்க மேல்நிலை தண்ணீர் தொட்டி, கீழ்நிலைத் தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீh; நிரம்பிய பூ ஜாடி, குளிh;சாதனப்பெட்டியின் கீழ் தட்டு, மணி பிளான்ட் ஆகியவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை மூன்று நாட்களுக்கொருமுறை அகற்றிட வேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய்களைக் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா;வினை ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

பின்ன, பி.என்.புதூர் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் ரூ.56 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டப்பட்டுவரும் பணிகளையும், மாணவ, மாணவிகள் சேர்க்கை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின், தொடர்ந்து வுண்டம்பாளையத்திலிருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.நகர் பகுதியில் புதிய தார்சாலை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு மேற்கொண்டார்.