ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வி உதவித்தொகை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் ரூ. 1,00,000/ மும், எம்.பி.ஏ மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் ரூ. 50,000/- மும் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் ஆர். பிரபு, செயலாளர் ஜி. செந்தில்குமார் ஆகியோர் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் அவர்களிடம் வழங்கினர்.

முன்னாள் மாணவர் சங்கத் துணைத்தலைவர் டி. சந்தானகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் பேரா. ஆர். ஷோபனா, உறுப்பினர் பிரேம் கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.