இரத்தினம் கல்வி குழுமங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கல்வி குழுமமும் கோவையைச் சேர்ந்த இக்னோரா சொலுஷன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்கான துவக்க விழா இணையம் வழியாக நடைபெற்றது.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் ஏ.செந்தில் தலைமையில் நடைபெற்ற இதில், இக்னோரா சொலுஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுசிக் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி நித்தியானந்தம், முதல்வர் நாகராஜ், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் மற்றும் முதல்வர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மதன் ஏ.செந்தில் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அதில் வேலைவாய்ப்புகளும் பெருகிவருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி பெற முடியும். இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும் , நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள். இதனால் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை எளிதில் பெற இயலும் என தெரிவித்தார்.