2030-ஆம் ஆண்டில் மாதக்கணக்கில் வெள்ளம் வர வாய்ப்பு – நாசா

வெயில், மழை, பனி என பருவக்காலங்களுக்கு ஏற்ப வானிலை மாறுவது வழக்கம். இந்த மாதமெல்லாம் கோடைக்காலம், இவையெல்லாம் மழைக்காலம் என நாம் மாதங்களை கணக்கிட்டு வைத்துள்ளோம். ஆனால் இப்போதெல்லாம் எப்போது மழை வருகிறது, எப்போது புயல் வருகிறது என்பது தெரிவதில்லை. கோடை காலத்தில் புயல் உருவாகிறது. மழைக்காலத்தில் கடுமையான பனி பெய்கிறது.

இந்த வானிலை மாற்றங்களுக்கு காரணமாக சொல்லப்படுவது புவியின் வெப்பம். வெப்பமயமாதலால் வானிலையில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. புவியின் வெப்பமயமாதலால் வானிலை மாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, பனிப்பாறை உருகுவது, கடல் மட்டம் உயருவது போன்ற பேரிடர்களும் உண்டாகத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாசா சமீபத்தில் ஆய்வின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2030ம் ஆண்டில் கடலில் மிகப்பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடலோர பகுதிகளை எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் நிலவின் தள்ளாட்டம் எனக் கூறுகிறது நாசா.

காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதனால் ஏற்படும் புவியின் சுழற்சி, நிலவின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தாலே பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்படலாம் என நாசா கூறுகிறது. இந்த ஆராய்ச்சியை நாசாவின் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் கடல் மட்டங்களை அதிகரிக்கும் சந்திர சுழற்சியின் பின்னர் வெள்ளத்தின் அதிகரிப்பு தொடங்கும் என்று ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்கு ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாசா கடல் மட்ட மாற்றம் அறிவியல் குழு உறுப்பினர்கள் தலைமை தாங்கியுள்ளனர்.

சமீப காலங்களில் ஏற்பட்ட கடல் அலை உயர்வு தொடர்பான காரணங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டும் இந்த ஆய்வு எடுக்கப்பட்டதாக கடல் மட்டம் குறித்து எழுதப்பட்ட ‘Nature Climate Change’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பெருங்கடல்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெரிய அலைகள் பதிவாகியுள்ளது. இந்த ஆய்வின்படி, 2030ம் ஆண்டுகளில் மாதக்கணக்கில் இந்த பெரும் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இது நிலா, பூமி, சூரியனின் நிலையை பொருத்து மாறுபடும் எனக் கூறப்பட்டுள்ளது. சில நகரங்களில் தினமும் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி இந்தியாவில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மின்னலுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கம் அதிகரிப்பதற்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணி என்கின்றனர் நிபுணர்கள். புனேவில் உள்ள ஐஐடிஎம் ( Indian Institute of Tropical Meteorology) மையத்தில் கடந்த மாதம் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய விஞ்ஞானி எஸ்.டி.பவார், “1960-ஆம் ஆண்டில் இருந்து 2019 காலக்கட்டத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் தற்போது மின்னல் உயிரிழப்புகள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. இது நேரடியாக காலநிலை மாற்றத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதால் நிலப்பரப்பின் மீதான ஈரத்தன்மை அதிகரிக்கிறது. இது மின்னல் அபாயத்தை ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.