டிரில்லியன் டன் கணக்கில் உருகும் பனிப்பாறைகள், எச்சரிக்கை!

உலகம் முழுவதும் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை காலநிலை மாற்றம். தொழிற்சாலைகள் மற்றும் அவற்றால் வெளிவரும் நச்சு வாயுகள் பூமியை மிகவும் மாசுபடுத்துகின்றன. அத்துடன் சேர்ந்து வாகனங்களிலிருந்து வெளியே வரும் புகையும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. மனித செயல்கள் மூலம் இயற்கையால் மறு சுழற்ச்சி செய்ய முடியும் அளவைவிட அதிகமான அளவில் கார்பன் வெளியிடப்படுகிறது. இந்த அதிகளவிலான கார்பன் வாயு சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதுடன் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக பூமியில் உள்ள பனிப்பாறைகள் விரைவாக கரையும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த பனிப்பாறைகள் உருகுவது தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக் கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன்படி 1994ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 28 டிரில்லியன் டன் பனிப்பாறை உருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்தமாக பிரிட்டன் நாட்டின் பரப்பளவு அளவிற்கு உருகியுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது சீனாவை சேர்ந்த அமைப்பு ஒன்று பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி 1979ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 102,000 சதுர அடி கிலோ மீட்டர் சுற்றுளவில் பனிப்பாறை உருகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கிரையோ ஸ்பியர் எனப்படும் பகுதியில் அதிகளவில் பனிப்பாறைகள் உருகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடக்கு பகுதியில் மட்டும் ஆண்டிற்கு தெலுங்கானா மாநில அளவிற்கு பனிப்பாறை உருகுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தென் பகுதியில் ஆண்டிற்கு 14,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பனிப்பாறை சுற்றளவு அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரு மாதத்திற்கு பனிப்பாறை உருகுவது 5.7 நாளில் 1970ஆம் ஆண்டில் இருந்தது தற்போது 3.6 நாட்களாக குறைந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக, “கிரையோ ஸ்பியர் பகுதியில் பனிப்பாறை உருகுவது பருவநிலை மாற்றத்திற்கான முக்கியமான அறிகுறி. இந்தப் பனிப்பாறை அளவு உருகுவது ஒரு உலகம் முழுவது பெரிய பிரச்னையை உண்டாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை பல நாடுகள் சரியாக பின்பற்றவில்லை பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆகவே பருவநிலை மாற்றம் தொடர்பாக அனைத்து நாடுகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை மேற்கொள் காட்டுகிறது. அவ்வாறு தீவிரம் காட்டவில்லை என்றால் இந்தப் பிரச்னை மனித குளத்திற்கு பெரிய பிரச்னையாக மாறிவிடும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.