பிரம்மா குமாரிகளின் 80வது ஆண்டு விழா கொண்டாட்டம்

பிரம்மா குமாரிகளின் 80வது ஆண்டு விழா மற்றும் சிவஜெயந்தி கொண்டாட்டம் இன்று (18.02.18) பிஎம்என் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராஜயோகினி பிரம்மா குமாரி சகோதரி ஆஷா ஆசியுரை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, கோவை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி ஐபிஎஸ், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், தொழிலதிபர் எஸ்.பி.அன்பு மற்றும் பொதுமக்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.